டைமிங்கில் ரைமிங் அடிச்சா... சக்ஸஸ்தான்... கலக்கும் அட்டி படக்குழு

Sekar Chandra
சென்னை: 
டைமிங்கா அடிச்சா... சிக்ஸர்தான்... கவனம் இல்லாட்டி போல்ட்டுதான். ஹலோ இது கிரிக்கெட் விமர்சனம் இல்லீங்க? அப்புறம் என்ன என்று கேட்கிறீர்களா?


டைமிங்காக விளம்பரம் செய்வது ஒரு கலை. அதை சரியாகப் பயன்படுத்துறவங்கதான் சக்ஸஸ் ஆகின்றனர். அப்படி ஒரு விளம்பரம்தான் இது.


அட்டி என்ற படத்தின் விளம்பரம்தான் அது. நம்ம கரகர குரல் மொட்டை ராஜேந்திரன் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அந்தப் பட விளம்பரத்தின் வாசகம்தான் மிகவும் ரசிக்க வைக்கிறது. 


"நான் வர்றேன்னு சொல்லு.. ஜீலை 7ம் தேதி வர்றேன்னு சொல்லு" என்ற வாசகத்துடன் அட்டகாசமாக காணப்பட்டது இந்த விளம்பரம். கபாலி படத்தில் ரஜினி சொல்லும் நான் வந்துட்டேன்னு சொல்லு... டயலாக் போல் இருக்கிறது என்று யூகிக்க முடிந்தால் நீங்க சூப்பர் தான் பாஸ். 


இந்த பிரபல வசனத்தை அப்படியே உல்டா அடித்து தங்கள் படத்திற்கு விளம்பரமாக்கி உள்ளது அட்டி படக்குழு. இதில் மொட்டை ராஜேந்திரனின் கெட்டப் வேறு அதகளம் செய்கிறது.



Find Out More:

Related Articles: