சென்னை:
நடிப்பு என்று வந்து விட்டால் இவரை யாராலும் பிடிக்க முடியாது. அதனால்தான் மது என்ற கயிற்றை வீசி இவரை எமன் அள்ளிச்சென்று விட்டான். அவர் யார் தெரியுங்களா?
கலாபவன் மணிதான். குடிப்பழக்கம் இருந்தாலும், தொழில் மீது மிகுந்த பக்தி கொண்டவர் இவர். நடிப்பு என்று வந்து விட்டால் இவரை இவரால் கட்டுப்படுத்த முடியாது என்பதை அனைவரும் அறிவர். இவரது மரணம் கேரளாவையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் இவர் கடைசியாக நடித்த படத்தின் தலைப்பு என்ன தெரியுங்களா? அதுவும் அவர் தமிழில் நடித்தது.
புதுசா நான் பொறந்தேன்.... படத்தின் தலைப்பு இதுவாக இருந்தாலும் காலன் இவரது பிறப்பை இறப்பாக்கி விட்டாரே...! தலைப்பை போல் அவர் வேறு எங்காவது புதுசாக பிறந்திருப்பாரா?