சென்னை:
முழுவதுமாக தெரிந்து கொண்டு பேசுங்கள்... அது அவர்கள் வேலையில்லை... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் ரசிகர்கள்.
என்ன தெரியுங்களா? கபாலி படம் ரிலீஸ் நெருங்க, நெருங்க... விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதாவது குற்றம் குறை சொல்வது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினி கொடுக்கிறேன் என்று சொன்ன ஒரு கோடி எங்கே என்று விவசாயிகள் என்ற பேரில் சிலர் பிரச்னையை கிளப்பினார்கள். அதுகுறித்து உண்மை வந்தவுடன் அவர்கள் சைலண்ட்.
இப்போது ஒரு போஸ்டர் டிசைன் சர்ச்சை. இணையத்தில் கட்டிடங்களுக்கு மத்தியில் ரஜினி முகம் தெரிவது போல் ஒரு டிசைன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது. அது இந்தி நடிகர் இர்பான் நடிக்கும் மதாரி படத்தின் போஸ்டர் போல் இருந்தது. இதுகுறித்து தன் டுவிட்டரில், பத்திரிகையாளர் சந்திப்பிலும் இர்பான் கூறும் போது நாங்க லோ பட்ஜெட் படம் எடுக்கிறோம். அவங்க (கபாலி) ஏன் எங்க போஸ்டரை காப்பி அடிக்கணும் என்று கேள்ளி எழுப்பி இருந்தார். அவ்வளவுதான் ரசிகர்கள் பொங்கி எழுந்து விட்டனர்.
இர்பான் நடிக்கும் மதாரி படத்தின் போஸ்டர்
எதையும் முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது. கபாலி படம் அறிவிப்பு வந்த நாளில் இருந்து ரசிகர்கள் தங்கள் மனதில் தோன்றி டிசைன்களை செய்து இணையத்தில் பதிவேற்றுகின்றனர். அதுபோன்றுதான் அந்த டிசைனும் வந்தது. அது கபாலி படக்குழு வெளியிட்டது அல்ல என்று சொல்ல சர்ச்சைக்கு விழுந்துள்ளது முற்றுப்புள்ளி. இர்பான் விசாரிக்காமல் இப்படி சொல்லலாமா?