"கபாலியில்" ரஜினி புரட்சியாளர்... வாயை திறந்த இயக்குனர் ரஞ்சித்

Sekar Chandra
சென்னை:
 'கபாலி'யில் ரஜினி புரட்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று இயக்குனர் ரஞ்சித் தன் மவுனத்தை கலைத்துள்ளார்.


ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள "கபாலி"தான் மக்களோட பேச்சு, மூச்சாக உள்ளது. ரஜினி அதில் "டான்" ஆக நடித்துள்ளார் என்றுதான் நமக்கு தெரிந்த விஷயம். டீசரும், பாட்டுகளும் செம தெறி தெறிக்க விட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள "கபாலி"


தினம் ஒரு செய்தி, தினம் ஒரு ரஜினி படம் என்று வந்தாலும் இதுவரை இயக்குனர் ரஞ்சித் வாயையே திறக்கவில்லை. இப்போதுதான் முதல்முறையாக ரஞ்சித் வாய்ஸ் விட்டுள்ளார். இது தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடந்திருக்கு.


அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? படத்தில் 2 கெட்டப்களில் தோன்றுவார் ரஜினி சார். அவருடைய இளமையான தோற்றத்துக்காக 80 - 90களில் உள்ள ரஜினி சாரின் திரைப்படங்களை வைத்து வடிவமைத்தேன்.


இப்படத்தில் ரஜினி சார் ஒரு புரட்சியாளராக நடித்திருக்கிறார். தமிழர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமன்றி, தன் மக்களைக் காப்பாற்ற டானாகவும் மாறுகிறார். அனைவருமே இது ஆக்‌ஷன் படம் என்று நினைக்கிறார்கள். ஆனால் 'கபாலி' ஒரு உணர்ச்சிகரமான படமும் கூட" என்று முதல்முறையாக வாயை தெரிவித்துள்ளார் ரஞ்சித். 


Find Out More:

Related Articles: