அண்ணன் உடையான்... இசைக்கு அஞ்சான்... புதுமொழிங்க...

Sekar Chandra
சென்னை:
அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வருது... ஆனால் எனக்கு என்று நொந்துபோய் கிடந்த குறளரசனுக்கு அண்ணன் நான் இருக்கேன்டா என்று தன் அடுத்த படத்தில் இசை அமைக்கும் வாய்ப்பை அள்ளி கொடுத்துள்ளார் சிலம்பரசன். "அண்ணன்டா".


இது நம்ப ஆளு படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார் குறளரசன். படத்தின் தாமதத்திற்கு இவர்தான் முக்கிய காரணம் என்பது உலகமே அறிந்த செய்திதான். முதல் படம் என்பதால் இசையில் சொதப்பக்கூடாது என்று வெகுநாட்கள்...இல்ல மாதங்கள் நீண்டது. அந்த படம் ஹிட் அடிக்க... பாடல்கள் பட்டி தொட்டி வரை போய் சேரவில்லை என்பதுதான் உண்மை.


இதையடுத்து சிம்புவிற்கு அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆக... இசை அமைக்க யாரும் கூப்பிடாததால் நொந்து போய் இருந்தார் குறள். அப்போதுதான் அண்ணன் நான் இருக்கேன்டான்னு சிம்பு தற்போது வாலு இயக்குனர் இயக்கும் தன் படத்தில் தம்பியை இசைக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். அண்ணன் உடையான் இசைக்கு அஞ்சான்.



Find Out More:

Related Articles: