சென்னை:
சரியான விளம்பரங்கள் இருந்திருந்தால் இந்த படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு இருக்கும். ஆனால் இப்போது சுமாராகத்தான் வசூல் என்று விநியோகஸ்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர் இந்த படங்களை பார்த்து... அந்த படங்கள்...?
இதுதான் அந்த படங்கள். பத்திரிகைகளின் பாராட்டுக்களை பெற்ற மெட்ரோ மற்றும் நகைச்சுவை படமான ராஜா மந்திரிதான் அவை. குறைந்த பட்ஜெட்டில் எடுத்து இருந்தாலும் இந்த படங்கள் அருமையாக இருந்திருக்கு.
ஆனால் போஸ்டரில் ஆரம்பித்து சரியானபடி விளம்பரம் செய்யப்படாததால் இவை வசூலில் சாதனை புரியாமல் போய்விட்டன. சரியானபடி பாதை போட்டு (விளம்பரம்) செய்திருந்தால் இந்த படங்கள் வசூலை அள்ளியிருக்கும் என்று சொல்லும் விநியோகஸ்தர்களில் இதில் "அம்மா கணக்கு" படத்தை சரியானபடி ப்ரோமட் செய்ததால் அனைவரும் மகிழ்ச்சி அடையும் படி வசூல் இருக்கு என்கின்றனர்.
நல்ல படங்கள்... அருமையான படமாக்கம் என்று இருந்தாலும் முறையான விளம்பரங்களே மக்களை ஈர்க்கிறது என்பது புலனாகிறது.