வாய் கொழுப்பு... ரொம்ப நாள் தாங்காதும்மா....

frame வாய் கொழுப்பு... ரொம்ப நாள் தாங்காதும்மா....

Sekar Chandra
சென்னை:
தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாக போய்விட்டதா என்று கடும் கோபத்தில் உள்ளனர் நம்ம கோலிவுட் ஆளுங்க... காரணம் என்ன தெரியுங்களா?


குத்துன்னு ஒரு படத்துல அறிமுகம் ஆனாரா ஞாபகம் இருக்கா... அவரேதான்... ரம்யா... இவர் கன்னட உலகில் அரசியலில் நுழைந்தார். கொஞ்ச காலம்தான். விட்டில் பூச்சி வாழ்க்கை போல. அப்புறம் தனக்கு தெரிந்த சினிமாவுக்கே திரும்பினார். இப்போ சிவநாகம் என்ற படத்தில் நடிக்கிறார்.


இவர் அடிக்கடி தமிழ் திரையுலகை திட்டுவதே தன் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்க... ஆந்திர மிளகாயை அரைத்து குடித்தது போல செம கோபமாகி அப்படித்தான் பேசுவேன்... அது என் உரிமைன்னு கத்தி தீர்த்து இருக்கார். இந்த விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து நம்ம கோடம்பாக்கத்து கோபாலுக குதியாய் குதிக்கின்றனர். அட வுடுங்கப்பா... எலி எட்டு கட்டையில கத்தினாலும் எட்டு பேருக்காவது கேட்குமா?


Find Out More:

Related Articles:

Unable to Load More