பேர வைச்சதுக்கே... போட்டியா... போதுமடா சாமி....

Sekar Chandra
சென்னை:
பேரும், ஆளும் ஒண்ணா மோதிக்கிட்டா எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கு இந்த மேட்டரு.


பிரமாண்ட டைரக்டர் இயக்கிய படத்துல 3கதாபாத்திரமா பெரிய நடிகர் நடிச்சதுல ஒரு கதாபாத்திரம் பேரை படத்து தலைப்பா வைச்சு படம் நடிச்சிருக்காரு சிரிப்பு ஸ்டார் நடிகரு. இப்ப என்னாச்சுன்னா... அந்த பெரிய நடிகரு நடிச்ச படமும், இவரு படமும் ஒரே நேரத்துல திரைக்கு வர்ற இருக்காம்.


இதனால சிரிப்பு ஸ்டாரு ரொம்ப யோசனையில இருக்காராம். தன் மேனேஜரை பினாமியா போட்டு படத்தை தயாரிச்சு இருக்கிறது அவரே தானே... இதுனால அந்த பெரிய நடிகரு படம் வந்த பிறகு ரிலீஸ் பண்ணலாமான்னு யோசனை கேட்டுக்கிட்டு இருக்காராம்.
என்னதான் பண்ணுறாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம். 


Find Out More:

Related Articles: