"கபாலி" மதுரை ஏரியா விற்பனை ரூ.8 கோடி... தயாரிப்பு மகிழ்ச்சி

frame "கபாலி" மதுரை ஏரியா விற்பனை ரூ.8 கோடி... தயாரிப்பு மகிழ்ச்சி

Sekar Chandra
சென்னை:
"கபாலி" இந்த மூன்றெழுத்து வார்த்தை மந்திரம்தான் தற்போது உலகமெங்கும் பேசப்பட்டு வருகிறது. எந்த பேப்பரை திறந்தாலும் இந்த வார்த்தை இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம். காரணம் மக்கள் மனதில் "மகிழ்ச்சி" என்ற வார்த்தையும், கபாலியும் பின்னி பிணைந்துவிட்டனர். இன்னைக்கு கபாலி பற்றிய செய்தி என்னன்னா?
தயாரிப்பாளர் செம மகிழ்ச்சியாம்.


கபாலி படம் கொடுத்துள்ள பெரிய பிளாட்பார்ம் தயாரிப்பாளர் தாணுவே எதிர்பார்க்காத ஒன்று என்கின்றனர் விபரமறிந்தவர்கள். காரணம் டீசர் தாறுமாறு ஹிட் என்றால், பாடல்களோ... டாப், டூப் ஹிட் அடித்துள்ளது. இப்பவே படத்தை வாங்க நான், நீன்னு போட்டோ போட்டி. யாருக்கு தருவது... யாரை விடுவதுன்னு தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாராம் தயாரிப்பு.


இதில் மதுரைக்காரங்க நாங்க எப்பவும் எதிலும் முந்திதான்...ஸ்பெசலுதான்னு கபாலி படத்தை 8 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்கியிருக்காங்களாம். மதுரை மட்டுமே ரூ.8 கோடின்னா பிற விநியோகஸ்தர்கள், சேட்டிலைட் உரிமை, அப்புறம் லொட்டுலொசுக்குன்னு இருக்கே... டேய் பையா... ஒரு பெரிய கால்குலேட்டர் வாங்குன்னு தயாரிப்பு தரப்பு ஆபீஸ் பாய்க்கு ஆர்டர் போட்டிருக்காம்.



Find Out More:

Related Articles:

Unable to Load More