கவர்ச்சியா... அப்படின்னா... ஸ்கின் பிராப்ளம் நடிகையில் அதிர்ச்சி

frame கவர்ச்சியா... அப்படின்னா... ஸ்கின் பிராப்ளம் நடிகையில் அதிர்ச்சி

Sekar Chandra
ஹா! கவர்ச்சியா... அது ரொம்ப "கவிச்சி" என்று கதை சொல்ற டைரக்டர்களுக்கு ஸ்பீடு பிரேக் போட்டு நிறுத்தறாராம் ஸ்கின் பிராப்ளம் நடிகை. எதற்காக தெரியுங்களா?


இவரும், அக்கட தேசத்து பெரிய ஹீரோவோட மகன் நடிகரும் காதலிக்கிறது எல்லாருக்கும் இப்போ தெரிஞ்சு போயிடுச்சு. அப்பா நடிகருக்கு கூப்பிட்டு சத்தம் போட்டாலும் காதலரோட அம்மா ஸ்கின் பிராப்ளம் நடிகையை கூப்பிட்டு பேசியிருக்காங்க... அப்போ.. அவங்களுக்கு பொண்ணை பிடிச்சு போனதா கேள்வி. அப்புறம் என்ன எஜமானி சொல்ல எஜமானர் மாற்ற முடியுமா? ஆனா அந்த குடும்பம் மிகவும் பாரம்பரியம் மிக்கது என்பதால்... இனிமே கர்சீப் அளவிற்கு டிரெஸ் போட்டு நடிக்கக்கூடாதுன்னு கண்டிஷனாம்.


லைப்ல செட்டில் ஆகறதுன்னு முடிவாயிடுச்சு... இனிமே நோ...கவர்ச்சின்னு போர்டு போடாத குறைதான். ஆனா அக்கட தேசத்துல கவர்ச்சியில்லாட்டி எப்படி? கதை சொல்ல வர்ற டைரக்டர்கள் உங்களுக்கு காஸ்ட்யூம் இப்படித்தான் ஆரம்பிக்கிறாங்க... அதுக்குதான் நடிகை போடுறாங்களாம் முட்டுக்கட்டை. முழுக்க இழுத்து போர்த்திக்கிட்டு நடிக்கிற கதை இருந்தா சொல்லுங்கன்னு... இதுனால டைரக்டர்கள் தலைத்தெறிக்க ஓட்டம் பிடிக்கிறாங்களாம்.


புகுந்த வீட்டு கவுரவத்தை காப்பாற்ற இனி "கவர்ச்சி" கவிச்சியாகிடுச்சு பொண்ணுக்கு.


Find Out More:

Related Articles:

Unable to Load More