நேரம் நல்லாயிருக்கு... சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை பண்ணுங்கோ...

Sekar Chandra
சென்னை:
இவரு காட்டு காட்டுன்னு விரலை ஆட்டினாலும் உச்சந்தலையில் உட்கார்ந்து சனிபகவான் ஆட்டி வைப்பதால் "வம்பு" நடிகர் நொந்துதான் போய் உள்ளார்.


சில ஆண்டுகளாக வம்பு நடிகருக்கு நேரம் சரியில்லை. முதல் காதல் புட்டுகொள்ள அடுத்த காதல் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியே போயிடுச்சு. தற்போது வெளியான இவரது படம் பெரிய அளவில் வெற்றி பெறவே, இவரது தந்தை ஜாதகக்கட்டை கையில் எடுத்துள்ளாராம்.


இந்த நேரத்தை மிஸ் பண்ணாமல், வம்புவுக்கு உடனே திருமணம் செய்து வைத்து விடும்படி யோசனை சொல்லியிருக்கிறாராம் ஒரு ஜோதிடர்.  மணமகள் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கிறார் நடிகரின் அப்பா. சீக்கிரம் பாருங்க... 



Find Out More:

Related Articles: