வயிற்று ஆகாதா... வளர்ச்சிக்கு ஆகாதா...? "பரோட்டா" பார்சலை கேன்சல் செய்த விமல்

Sekar Chandra
சென்னை:
வயிற்று ஆகாதா இல்ல... வளர்ச்சிக்கு ஆகாதான்னு தெரியலை.. புரோட்டாவே வேண்டாம்னு விமல் முடிவு எடுத்து இருக்காராம். என்ன கோபம்.


நம்புறவனுக்கு நல்லவன், நம்பாதவனுக்கு ரொம்ப நல்லவன்னு காலம் ரொம்ப மாறிக்கிட்டு இருக்கு. நட்பு இன்னும் அப்படியே இருக்குமா என்ன. நட்புன்னா அது நாங்கதான்னு மைண்ட் வாய்ஸில் மூழ்காத ஷிப்பேன்னு பாடிய விமல், சூரி கப்பலில் இப்போது டைட்டானிக் ரேஞ்சில் ஓட்டையாம். 


காரணம்... பூபதி பாண்டியன் இயக்குகிற படத்தில் விமலுடன் சூரிக்கு பதில் களமிறங்கப்போவது ரோபோசங்கர். அட கொய்யால ஏன் இப்படின்னு? கேட்டா... பதில் இப்படி வருது. மாப்ள சிங்கம் படத்தில் தான் சிங்கமா இருக்கணும்னு விமல் நினைக்க... விமல் அளவுக்கு தனக்கு முக்கியத்துவம் வேணும். என் கெப்பாசிட்டி இப்ப வேறன்னு சூரியும் அடம் பிடித்தனராம். 


அப்போது ஏற்பட்ட விரிசலால்தான், உடம்புக்கு கேடு விளைக்கும் என்று சப் டைட்டில் போடாத குறையாக "பரோட்டாவை" ஒதுக்கி வைத்துவிட்டாராம் விமல்.



Find Out More:

Related Articles: