ஸ்கூட்டர் வடிவில் பீட்சா கட் செய்ய கத்தி... கத்தி...

Sekar Tamil
சென்னை:
ஒரு பொருளை ஒரே விதத்தில் பார்த்துக் கொண்டிருந்தால் அலுப்புதான் ஏற்படும். அதான் மாற்றி யோசிக்கிறாங்கப்பா... சாதாரண ரப்பர் முதல்கொண்டு வித்தியாசமான வடிவத்தில் கொண்டு வந்த நம்ம ஆளுங்களை மிஞ்சிடுவாங்க போலிருக்கு.


இத்தாலியின் பேமஸ் உணவான பீட்சா... இப்போ இந்தியர்களின் உணவாகி வருது என்று சொன்னா இல்லேன்னா சொல்வீங்க... ஒரு காலத்தில் அட நம்ம வீட்டு வெங்காய ஊத்தப்பத்தை அடச்சீன்னு சொன்ன வாய்கள் கூட இப்ப அதுபோலவே இருக்கும் பீட்சாவை ஆர்டர் கொடுத்து வீட்டுல வைச்சு சாப்பிடறாங்க.


ஸ்கூட்டருல வந்து பீட்சா டெலிவரி பண்ணுறாங்க. சரி இதெல்லாம் தெரிந்த செய்திதானே என்கிறீர்களா? அந்த பீட்சாவை கட் செய்ய பெரிய கத்தி வேண்டும் இல்லியா.. அதுவும் வட்ட வடிவில்... இப்ப வீட்டுலேயே பீட்சா தயாரிக்கிற அளவுக்கு முன்னேறிய நம்ம ஆளுங்களுக்கு அம்மாம் பெரிய கத்திக்கு எங்கே போவாங்க... அதுக்குதான் ரூம் பிடிச்சு... மூளையை கசக்கி இப்படி ஒரு கத்தியை கண்டு பிடிச்சு இருக்காங்க... எப்படி தெரியுங்களா? சின்ன ஸ்கூட்டர் சைசில்... இதுல எப்படி வெட்டறதுன்னு கேட்கறீங்களா? அட ஸ்கூட்டர் டயருக்கு பதிலா வட்டவடிவில் கத்தியை வைச்சிருக்காங்கப்பா... இனிமே என்ன பஜாரில் இது புதுசுன்னு வாங்கிட்டு வந்து உங்க வீட்டு செல்ல பிள்ளைகளுக்கு பீட்சா செஞ்சு கட் பண்ணி கொடுங்க...


Find Out More:

Related Articles: