உயர ஆண்களுக்கு நெதர்லாந்து... பெண்களுக்கு லாத்வியா...

Sekar Tamil
லண்டன்:
உலக அளவில் மிக உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும் முதல் இடத்தை பிடித்து முன்வரிசையில் நிற்கின்றன.


லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் உயரமான மற்றும் குள்ளமான ஆண், பெண் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 


இந்த ஆய்வில் நெதர்லாந்தை சேர்ந்த ஆண்கள் உலகிலேயே மிக உயரமானவர்களாக உள்ளனர். அவர்கள் சராசரியாக 183 செ.மீட்டர் உயரம் அதாவது 6 அடி உயரம் கொண்டவர்களாக உள்ளனர். பெண்களில் லாத்வியா நாட்டினர் உயரமானவர்களாக இருக்கின்றனர். இவர்கள் 5 அடி 7 அங்குலம் வரை வளர்ந்துள்ளனர்.


உயரம் அதிகமானவர்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்கின்றனர். சிறப்பாக கல்வி கற்று அதிக பணம் சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் சில உடல்நலக் குறைபாடுகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: