காய்கறிகளிலே கலர்புல்லான காய் பீட்ரூட் தான். இதை நாம் சமையலில் மட்டும் பயன்படுத்துவோம். ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. பல நோய்களுக்கு, பீட்ரூட் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
1. பீட்ரூட் சாறுடன், தேன் கலந்து குடித்து வந்தால் அல்சர் நோய் குணமடையும்.
2. பீட்ரூட்டை நறுக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பச்சையாக உண்டு வந்தால், இரத்தத்தின் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
3. தினமும் 1 டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அருந்தி வந்தால், புற்று நோய் பரவுவது தடுக்கப்படும்.
4. பீட்ரூட் கீரையை சமைத்து உண்பதனால், மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.
5. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பீட்ரூட் சாறை, குடித்து வருவதனால், பித்தம், வாந்தி, மலசிக்கல், நீரிழிவு நோய் ஆகியவை குணமடையும்.