இன்றைக்கு பெரும்பாலான பெண்கள், மார்பக புற்று நோயால் அவதிப்படுகின்றனர். இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இதை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
மார்பக புற்று நோய் ஏற்பட காரணங்கள்.
சிறு வயதிலே பருவமடைதல்.
மாதவிடாய் நிற்பதில் ஏற்படும் தாமதம்.
உடல் பருமன்.
கொழுப்பு சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்.
கருத்தடை மாத்திரை உபோயோகித்தல்.
பரம்பரை வியாதி.
மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், சர்க்கரை பூசணி, காளான், பூண்டு, மிளகு போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
தானிய வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கொழுப்பு இல்லாத மீன் மற்றும் ஆட்டிறைச்சியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவை உண்ணலாம்.