இதயத்தை பாதுகாக்க சில டிப்ஸ்....

Sekar Tamil
நம் உடம்பில் எப்போதும் செயல்பட்டு வருவது இதயம் ஒன்று தான். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் நல்ல நிலையில் இருக்கும். அதனால் இதயத்தை பேணி காப்பது மிகவும் அவசியம். 


1. தினமும் மாதுளம் பழ சாறு, அருந்தி வந்தால் இதயம் வலுவடையும். 


2. இதய படபடப்பு உள்ளவர்கள், சுட்ட பூண்டை சாப்பிட்டு, தண்ணீர் குடித்தால் படபடப்பு நீங்கும். 


3. இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க வெள்ளரி பிஞ்சு சாப்பிடலாம். வெள்ளரி பிஞ்சு இதயத்திற்கு மிகவும் நல்லது.


4. கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகிய இரண்டையும் சுத்தம் செய்து, கஷாயம் வைத்து 10 நாட்கள் தொடர்ந்து, குடித்து வந்தால் மார்பக வலி குறையும். 


5. கொழுப்பு குறைந்த, நார் சத்து அதிகமான உணவுகளை, உண்பது இதயத்திற்கு மிகவும் நல்லது. 


குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ், பயிறு வகைகள் ஆகியவை இதயத்திற்கு மிகவும் நல்லது.


Find Out More:

Related Articles: