ஒரு மனிதன் எந்த நோய் வந்தாலும் சமாளித்து விடுவான். ஆனால் இருமல் வந்தால் தாங்கி கொள்வது மிகவும் அரிது. சுவாச குழாயில் கிருமிகள் அல்லது தூசிகள் இருந்தால் இருமல் வரும்.
இருமலுக்கான, பாட்டி வைத்திய முறைகளை பின்பற்றினால், நாம் எளிதில் குணப்படுத்திவிடலாம். இதை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.
1. இரவு படுக்கும் முன்பு, பாலை நன்கு சுண்ட காய்த்து விட்டு, அதில் மஞ்சள் மற்றும் பூண்டை தட்டி, பனங்கற்கண்டுடன் சேர்த்து குடித்து விட்டு, படுத்தால் இருமல் குணமடையும்.
2. சுக்கு பால் குடித்து வந்தால், இருமல் நிற்கும். சுக்கு, சுவாச குழாயில் உள்ள தூசுகளை நீக்கும் சக்தி கொண்டதால், இது இருமலை போக்கி விடும்.
3. அமிழ்தவல்லி சாறு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் காலையில் 2 ஸ்பூன் குடித்து வந்தால், இருமல் சரியாகும்.