தலை வலி வந்தால், எந்த வேலையும் செய்ய முடியாது. அதிலும் ஒற்றை தலைவலி வந்தால் எதுவுமே பண்ண முடியாது. இதை நாம் வீட்டில், இருந்தபடியே சரி செய்து விடலாம். இதற்கான தீர்வு முறைகளை இப்போது நாம் காணலாம்.
1. எலுமிச்சை தோலை, நன்கு காய வைத்து, அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நிற்கும்.
2. வாசனை எண்ணெய்யால் தலைக்கு ஒத்தடம் கொடுத்தால், தலைவலி உடனே நின்று விடும்.
3. பூண்டையும், மிளகையும் தட்டி, நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி, ஆரிய பிறகு தலை நெற்றியில் தேய்த்தால் தலைவலி சரியாகும்.
4. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். இது வலியை குறைய செய்யும்.
5. இஞ்சி, பூண்டை தட்டி, அதன் சாறை குடித்தால், ஒற்றை தலைவலி உடனே சரியாகும்.