வருது... விரைவில் வருது... ஆஸ்துமாவிற்கு தீர்வு...

Sekar Tamil
பிரிட்டன்:
விரைவில் வருது... வருது...வருது... என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். என்ன விஷயம்ன்னா?


ஆஸ்துமாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் சோதனை அடிப்படையில் ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். அதுதான் விஷயமே... இதில் அப்படி இருக்கு என்று கேட்கிறீர்களா? இருக்கே!


 கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் அறிகுறிகள் மேம்பட்டிருப்பது உணரப்பட்டதாக லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சிறிய சோதனை முயற்சியில் தெரிய வந்துள்ளது.


 லான்செட் சுவாச மருத்துவதிற்கான இதழ் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ஆஸ்துமா யு.கே என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் சமந்தா வாக்கர் கூறுகையில், இந்த ஆராய்ச்சியை எச்சரிக்கையுடன் கூடிய நேர்மறை சிந்தனையுடன் பார்க்கப்பட வேண்டும். இது மருந்துக் கடைகளில் ஆஸ்துமாவுக்காக கிடைக்கும் ஒரு மாத்திரையாக உடனே இல்லாவிடிலும்... விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துள்ளார்.



Find Out More:

Related Articles: