மேட்டூரில் அதிர்ச்சி... கண் அறுவை செய்து கொண்டவர்களுக்கு பார்வை பறிபோனது?

Sekar Chandra
மேட்டூர்:
அதிர்ச்சியோ... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேட்டூர் மருத்துவமனை. காரணம் என்ன தெரியுங்களா?


மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த 15 பேர் பார்வை இழந்ததாக வந்த செய்திதான் அது. இந்த புகார்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மருத்துவத்துறை இணை இயக்குநர் இன்பசேகரன் விசாரணை நடத்திய போதும் சென்னையிலிருந்து சிறப்பு விசாரணைக்குழுவும் புறப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம் மேட்டூரில் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்காக இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதான் தற்போதைய பரபரப்புக்கு காரணமாகி உள்ளது. 


அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களில் 15-க்கும் அதிகமானோருக்கு பார்வை தெரியவில்லையாம். இத்தகவல் கிடுகிடுவென பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பாதிக்கப்ட்டவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதிக்க பெ அவர்களது உறவினர்கள், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்னையின் அளவு அதிகரிக்கவே மருத்துவத்துறை இணை இயக்குநர் இன்பசேகரன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சென்னையிலிருந்து சிறப்பு விசாரணைக் குழு சேலம் விரைந்துள்ளது.


Find Out More:

Related Articles: