ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி... தகவல்

frame ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி... தகவல்

Sekar Chandra
புதுச்சேரி:
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புதிதாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது இந்த மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அடுத்த பெருமையாகும்.


இதுகுறித்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி இயக்குனர் பரிஜா நிருபர்களிடம் கூறியதாவது:–


கடந்த 3 ஆண்டுகளாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெற்றிகரமாக தொடர்ந்து இதுமேற்கொள்ளப்படுவதால், 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் இதற்கான பதிவை புதுப்பித்து மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.


மத்திய அரசு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புதிதாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் அனுமதி தந்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 8 மாதங்களாக நடந்து வருகின்றன. இதற்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 


தனியார் ஆஸ்பத்திரிகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.20 லட்சத்துக்கு மேல் செலவாகும். எனவே, ஜீலை மாதம் முதல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


மேலும் விரைவில் தோல் மாற்று அறுவை சிகி்ச்சை செய்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் ஜிப்மர் மருத்துவமனை சர்வதேச உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையமாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.



Find Out More:

Related Articles:

Unable to Load More