சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது!

SIBY HERALD

காய்கறி  வரத்துக் குறைந்ததால், கோயம்பேடு சந்தையில்  காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  மழை பெய்யாததாலும்,  வறட்சி காரணமாகவும்  உற்பத்தி குறைந்துவிட்டது. கோயம்பேடு காய்கறி  மார்க்கெட்டுக்கு காய்கறி  லோடு வரத்து  குறைந்துள்ளது.

 


தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும்  வெயில் காரணமாக  விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தண்ணீர் இல்லாததால்,  ஒரு மாத காலமாக  சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறி விலை உயர்ந்துள்ளது.

 


தேனி , தூத்துக்குடி  மாவட்டங்களில் காய்கறி விலை 50 சதவீதம்  உயர்ந்துள்ளது. வரத்து குறைவால், காய்கறிகள் விற்று தீர்ந்துவிடுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


Find Out More:

Related Articles: