மார்பகங்களுக்கு அடியில் இருக்கும் கருமையை விரட்ட டிப்ஸ்....

Sekar Tamil
நம் உடம்பில் சில பகுதிகள் மட்டும் கருப்பாக காணப்படும். அதில் மிகவும் முக்கியமானது மார்ப்பகங்கள் தான். சிலருக்கு மார்பகங்களின் அடியில் கருமையாக இருக்கும். இதை நாம் வீட்டிலையே பயன்படுத்தும் பொருட்களை கொண்டு, விரட்டி விடலாம். அதை பற்றி இப்போது நாம் விரிவாக பார்க்கலாம்.


1. சோள மாவு 


முதலில் மார்பகங்களின் அடிப்பகுதியை நீரால் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, சோள மாவை அப்பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.


2. ஆப்பிள் சீடர் வினிகர்


ஆப்பிள் சீடர் வினிகரை, தண்ணீரில் கலந்து, காட்டன் பயன்படுத்தி, மார்ப்பகங்களின் அடிப்பகுதியில் அப்பளை செய்து, குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால், படிந்திருக்கும் கருமையை எளிதில் விரட்டி விடலாம்.


3. பேக்கிங் சோடா 


பேக்கிங் சோடாவில் சிறிது தண்ணீர் விட்டு, பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பிறகு இதை மார்பகங்களுக்கு அடியில் பூசி, நன்கு உலர்ந்த பின்பு கழுவினால் கருமை மாறும்.


4. எலுமிச்சை சாறு 


எலுமிச்சை சாறு படிந்திருக்கும் கருமையை நீக்கும் தன்மை கொண்டது. அதனால் இதை, கருமை படிந்திருக்கும் இடத்தில் பூசி வந்தால் கருமை காணாமல் போய்விடும்.


5. பால் 


பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது ப்ளீச்சிங் தன்மைக் கொண்டது. அதனால் பாலை காட்டனில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். 


Find Out More:

Related Articles: