இன்றைய கால கட்டத்தில், பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும், முகப்பருக்கள் மட்டும் அதன் தழும்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு கடைகளில் கிடைக்கும் பல்வேறு க்ரீம்களை உபோயப்படுத்துவதால், மேலும் பருக்கள் அதிகரிப்பதோடு, அலர்ஜியும் உண்டாகுகிறது.
இந்நிலையில், இதனை சரி செய்ய வெந்தயம் மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெந்தயத்தை 2 மணி நேரம் ஊற வைத்த பின், அரைத்து முகத்தில் பருக்கள் மற்றும் தழும்புகள் இருக்கும் இடங்களில் பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வெந்தயம்
இதையடுத்து, ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, அதனுடன் பன்னீர் அல்லது பசும் பால் கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி, அதை முகத்தில் மாஸ்க்காக தடவி கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து கழுவி வேண்டும். இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால், பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்குவதோடு, உடல் உஷ்ணமும் தீரும்.